ஸ்ரீ ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர் ராஜ
கோபுரம் நிர்மாண் கமிட்டி
ஸ்ரீமத் நாராயணன் தன் துணையான ஸ்ரீலஷ்மியோடு தன்னை சரணடைபவர்களை கைவிடாமல் அனுக்ரஹிக்கிறார் என்பது திண்ணம் . அந்த சரணாகதியை செய்வதற்கு கோயில்கள் பெரும் பங்கு ஆற்று கின்றது . அக்கோயில்களைத்தான் ஆழ்வார்க்ளும் ஆசார்யர்களும் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள் .
அப்பேற்பட்ட கோயில்கள் ஆகமசாஸ்திர விதிகளின்படிதான் எழுப்பப்படுகின்றன.அதன் காரணமாகவே , கோயில்களுக்கு 'ராஜ கோபுரம்' என்பது உயர்ந்து பிரதானமாகஅமைக்க பெறுகின்றது. அத்தகைய 'ராஜ கோபுரத்தின் பலன்கள் பலப் பல .'கோபுர தரிசனம் பாப விமோசனம் ,கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கண் விழித்தவுடனும், எங்கு வெளியில் செல்லும் போதும் , நம் மனதில் எவ்வித சஞ்சலங்களோ குறைகளோ இருந்தாலும் கோவில் வரை செல்ல முடியா விட்டாலும் கூட , இருக்கும் இடத்திலிருந்தே இருகரம் கூப்பி கோபுரத்தை நோக்கி அஞ்சலி செலுத்தினாலே போதும் அவர்கள் அனுக்ரஹம் நிச்சயம்.
அதன் காரணமாகவே ஸ்ரீ பூமி தேவி சமேத ஸ்ரீ ஒப்பிலியப்பனும் தனக்கு ஒரு 'ராஜ கோபுரம்' கண்டருளி பாகவதோத்தமர்களை அனுக்ரகஹித்து ஆட் கொள்ள திருவுள்ளம் கொண்டுள்ளான்.
மேற்கூறிய ஐந்து நிலைகளைக் கொண்ட ராஐ கோபுர திருபணியை இக் கோயில் தொடங்கி 25 வருடங்கள் முடியும் 2011 க்குள் நிறைவெற்ற ஸ்ரீ ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர் நிர்மாண் கமிட்டி ஆமைக்கப்பட்டுள்ளது . அதற் கான அடிக்கல் 29 ஏப்ரல் 2009 அன்று
நாட்டப்பட்டது.
ராஜகோபுரம் நிர்மாணிக்கும் சமயத்திலேயே கீழ்க்கண்ட கைங்கர்கயங்களையும் மேற் கொள்ள விழையப்ப்ட்டுள்ளது.
1.ஆழ்வார்கள் சன்னதி 2.சக்கரத்தாழ்வார் மற்றும் ஹனுமார் சன்னதிகளின் புனரமைப்பு
3.கோவிலுக்கான புதிய மதில் சுவர்
4.பெருமாளுக்கு புதிய வாகனங்கள் ,துவஜஸ்தம்பம் செய்வித்தல் மேற் படி
ஐந்து நிலை ராஜ கோப்புரம் மற்றும் இதர திருப்பணிகளை நிறைவேற்ற சுமார் 75 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகவதோத்தமர்களும் , ஆஸ்தீக அன்பர்கள் மற்றும் கைங்கர்யபார்களும் மேற் கூறிய திருப்பணிகளை துரிதகதியில் நிறை வேற்ற தங்களால் இயன்ற துளியை தாராளமாக உகந்தளித்து ஸ்ரீ பூமி தேவி சமேத ஒப்பிலியப்பன் மற்றும் ஸ்ரீ சீதா சமேத பட்டாபிஷேக ராமர் பரிபூரண ஆசிகளை பெற்று இம்மைக்கும் மறுமைக்குமாந பேற்றை அடையுமாறு வேண்டி அமைகிறோம்.
நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரி
பேங்க் ஒப் இந்தியா மடிப்பாக்கம் கிளை சென்னை- 600091.
வங்கி இருப்பு எண் - 805610110000711
காசோலை அனுப்ப வேண்டிய முகவரி ஸ்ரீ ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர் ராஜகோபுரம் நிர்மாண் கமிட்டி
(Soprrn committee)
ராம் நகர் தெற்கு, புழுதிவாக்கம்,
சென்னை - 600091 ,தொலைபேசி எண் -044 22582333.