ஸ்ரீ ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர் திருக்கோயில்

ஸேவா ஸமிதி
ஸ்ரீபாத கைங்கர்ய ஸபா
மஹோத்ஸவ புகைப்படங்கள்
கோயில் பூஜா காலங்கள்
ஒர் வேண்டுகோள்
கோயில் முகவரி

ஸ்ரீ:

ஸ்ரீ பூமிதேவி ஸமேத லவணவர்ஜித ஸ்ரீ வெங்கடேச பரப்ரஹ்மணே நம:

ஸ்ரீ ஸீதா ஸமேத பட்டாபிஷேக ராம பரப்ரஹ்மணே நம்:

 

ஸ்ரீ ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர்

ஸேவா ஸமிதி

 
 

                             ஸ்ரீ: பதியான   ஸர்வேஸ்வரன் ஆச்ரிதர்ககளை

 ஸம்ரக்ஷப்தற்காக பலவிதமான   அவதாரங்கள் செய்தருளிநான். அதில் ஸம்ஸாரமான   சாகரத்தில் தவிக்கின்ற ஜீவர்களூக்காக பரதத்வமாகிய ஸ்ரீமந் நாராயணன்   ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அர்ச்சாவதாரமாக பற்பல திவ்யதேங்களில் ஸ்வயம் வ்யக்தமாகவும் மஹரிஷிகளுக்கு ஸேவை சாதித்தும்ஆழ்வார்கள் அனுபவித்து அதன் அனுபவபூர்வமாக அவனுடைய  மேன்மையை வெளிப்படுத்தியும், பற்பல ஆசார்ய ஸ்ஸார்வ  பெளமர்களாலும் மஹாயன்களாலும் மனோரதித்து , அவனுடைய ஸங்கல்பத்துக்கு இணங்க இக்கலியுகத்தில் பல திவ்யதேசங்களிலும்    பலபாகவதோத்தமர்கள் வாசம் செய்யும் புண்யபூமியிலும் எழுந்தருளிஸேவை ஸாதிக்கின்றான்.

 

 

                             அந்த எம்பெருமான் தன்னையண்டியவரை ஒரு பொழுதும் நழுவ  விடாதவன் . மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்ற சொல்லுக்கு இணங்க  கலேள வெங்கடநாயக : என்றும் , ஸ்ரீ பூமி தேவி ஸமேத ஒப்பிலியப்பனாக மார்கண்டேய மஹரிஷியுடனும் அபயஹஸ்தத்துடனும் , தன் அடிகிழ் அமர்ந்து புகுந்தவருக் கெல்லாம் நிழல் தரும் கற்பகவ்ருக்ஷமாகவும் , அப்படி சரணமடைந்தவர்கள் எதற்கும் நிர்பயமாக இருக்க மாசுச: என்ற

வரத ஹஸ்தத்துடன் ஸீதா தேவி ஸமேத பட்டாபிஷேக ராமனாகவும் ,திருமோகூர் திவ்ய தேசத்தில் எழுந்தருளி ஸேவை சாதிப்பது  போன்ற ஸ்ரீஸூதர்சன் ஆழ்வாரும் , ஆசார்ய ஸார்வபெளமர்கள், மஹான்கள் திருவாக்கு அலர்ந்து சொல்வதைப்போல முதலாழ்வார்களாகி பொய்கை அழ்வார் , பூதத்தாழ்வார் , பேயாழ்வார் அவதார , ஸ்தலங்களுக்கு மத்தியில் நடுநாயகமாக அமைந்துள்ள புழுதிவாக்கம் என்னும் புண்ணிய பூமியில் எழுந்தருளியுள்ளார் .